states

img

ஜம்மு காஷ்மீர் தேர்தல்: 5 மணி வரை 65.48% வாக்குகள் பதிவு!

ஜம்மு காஷ்மீரில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி வரை 65.48% வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 7 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு இன்று இறுதிக்கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்  வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் 59% வாக்குகளும், 2ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவில் 56% வாக்குகளும் பதிவாகியுள்ளன.
காலை 9 மணி நிலவரம்: 11.6% வாக்குகள் பதிவு
சம்பாவில் 13.31% வாக்குகளும், கதுவாவில் 13.09% வாக்குகளும், ஜம்முவில் 11.46% வாக்குகளும், பந்திபூரில் 11.64% வாக்குகளும்,  குப்வாராவில் 11.27% வாக்குகளும், பாரமுல்லாவில் 8.89% வாக்குகளும் பதிவு.
காலை 11 மணி நிலவரப்படி 28.12% வாக்குகள் பதிவு
உதம்பூரில் 33.84% வாக்குகளும், கதுவாவில் 31.78% வாக்குகளும், சம்பாவில் 31.50% வாக்குகளும், குப்வாராவில் 27.34% வாக்குகளும், ஜம்முவில் 27.15% வாக்குகளும், பாரமுல்லாவில் 23.20% வாக்குகளும் பதிவு.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி 44.08% வாக்குகள் பதிவு
உதம்பூரில் 51.66% வாக்குகளும், சம்பாவில் 49.73% வாக்குகளும், கதுவாவில் 50.09% வாக்குகளும், ஜம்முவில் 43.36% வாக்குகளும், பந்திபூரில் 40.67% வாக்குகளும், குப்வாராவில் 42.08% வாக்குகளும், பாரமுல்லாவில் 36.60% வாக்குகளும் பதிவு.
பிற்பகல் 3 மணி நிலவரப்படி 56.01% வாக்குகள் பதிவு
உதம்பூரில் 64.43% வாக்குகளும், சம்பாவில் 63.43% வாக்குகளும், கதுவாவில் 62.43% வாக்குகளும், ஜம்முவில் 56.74% வாக்குகளும், பந்திபூரில் 53.09% வாக்குகளும், குப்வாராவில் 52.98% வாக்குகளும், பாரமுல்லாவில் 46.09% வாக்குகளும் பதிவு.
மாலை 5 மணி நிலவரம்: 65.48% வாக்குகள் பதிவு
உதம்பூரில் 72.91% வாக்குகளும், சம்பாவில் 72.41% வாக்குகளும், கதுவாவில் 70.53% வாக்குகளும், ஜம்முவில் 66.79% வாக்குகளும், பந்திபூரில் 63.33% வாக்குகளும், குப்வாராவில் 62.76% வாக்குகளும், பாரமுல்லாவில் 55.73% வாக்குகளும் பதிவு.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் அக்டோபர் 8-ஆம் தேதி வெளியாக உள்ளது.